காவிரியிலிருந்து தண்ணீர் வராது; தலைவர் மட்டும் வருவதா என ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
தினத்தந்தி அதிபர் சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினத்தை ஒட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய சீமான், தமிழகத்தை தமிழர்கள்தான் ஆளவேண்டும் எனவும் கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு வாழ வந்தவர்கள் ஆள நினைப்பது சரியல்ல என்றும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.
The post காவிரியிலிருந்து தண்ணீர் வராது appeared first on Tamil.