வாழை தண்டு மோர் குழம்பு செய்வது எப்படி என விளக்குகிறது இந்த சமையல் குறிப்பு.
நமது 30 வகை குழம்பு செய்முறை தொகுப்பில் இந்த சைவ குழம்பு வகைகள் செய்முறை, வாழைத்தண்டு மோர்க்குழம்பு எப்படி செய்வது என விளக்குகிறது.
வாழை தண்டு மோர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:-
நறுக்கிய வாழை தண்டு – 300 கிராம்.
நறுக்கிய கறிவேப்பிலை – ஒரு பிடி.
நறுக்கிய நீர் பூசணிக்காய் – 200 கிராம்.
புளிக்காத மோர் – 300 மி.லி.
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்.
உப்பு – தேவைக்கு ஏற்ற அளவு.
சின்ன வெங்காயம் – 100 கிராம் (பொடியாக நறுக்கியது).
சீரகம் – 2 டீஸ்பூன்.
மல்லித்தழை – சிறிது.
தேங்காய்த்துருவல் – 100 கிராம்.
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.
காய்ந்தமிளகாய் – 3 எண்ணம்.
வாழை தண்டு மோர் குழம்பு வைப்பது எப்படி:-
தேங்காய் துருவல் , சீரகம், மல்லி தளை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நைசாக அரைத்து வைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி வெங்காயம், வாழை தண்டு மற்றும் நீர் பூசணிக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
பின்பு இதனுடன் அரைத்தக் கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன் பின்பு கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கிளறி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி லேசாகக் கொதிக்க விடவும்.
கொதித்து பச்சை வாசனை போனதும் மோரைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
மிதமான தீயில் மோரைக் கொதிக்க விடாமல் சூடாக்கவும்.
சூடு மிதம் ஆனதும் இறக்கி மல்லித் தளை தூவி விடவும்.
சுவையான வாழைத்தண்டு மோர்க்குழம்பு தயார்.
நன்றி http://www.dinakaran.com/
The post வாழை தண்டு மோர் குழம்பு | 30 வகை குழம்பு இரண்டு appeared first on Tamizzle.com.