1 வாரத்தில் 5 கிலோ குறைக்க முடியுமா?
1 வாரத்தில் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பினை பின்பற்றி எளிதில் 5-6 கிலோ எடையை ஒரே வாரத்தில் குறைக்கலாம்.
நான் சொந்தமாக கடந்த இரு வாரங்களில் இதை பின்பற்றி ஒன்பது கிலோ எடை குறைத்துள்ளேன்.
முதல் வாரம் சைவ முறையிலும் இரண்டாம் வாரம் அசைவ முறையிலும் இந்த திட்டத்தை பின்பற்றி அதன் மூலம் இது சாத்தியம் ஆகியது. (2 வாரம் ஒன்பது கிலோ)
இந்த முறை நமது உடலில் கொழுப்பை குறைத்து சட்டென உடல் எடை குறைக்க உதவுகிறது.

நாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள திட்டத்தை மேற்கொள்கையில் நமது பிரத்தியோக நீரை இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை அருந்துங்கள்.
இந்த நீர் நமது உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தபடுத்த உதவும்.
எடை குறைக்க தண்ணீர்:-
தேவையான பொருட்கள்:-
- வெள்ளரிக்காய் – ஒரு பெரியது, வட்டமாக மெலிதாக நறுக்கியது
- எலுமிச்சை – இரண்டு நடுத்தரமானது, வட்டமாக மெலிதாக நறுக்கியது
- புதினா – பதினாலு இலைகள் முழுமையாக இருக்கட்டும்
- இஞ்சி – ஒரு விரல் கட்டை அளவு துருவியது
சுத்தமான குடிநீர் – இரண்டு அ மூன்று லிட்டர்

செய்முறை:-
- ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் இட்டு அதனுடன் இந்த தண்ணீரை ஊற்றவும்.
- இரவில் ஊற்றி வைத்து பத்து முதல் பனிரெண்டு மணி நேரம் கழித்து இதை குடிக்க தொடங்கவும்.
நமது சலாட்:-
தேவையான பொருட்கள்:-
- முட்டைகோஸ் – ஒரு நடுத்தரமானது
- வெள்ளரிக்காய் – மூன்று சிறியது
- கேரட் – மூன்று சிறியது
- வெங்காயம் – 1 நடுத்தரமானது
செய்முறை:-
மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் நீள வாக்கில் மெல்லியதாக அறிந்து, ஒரு பாத்திரத்தில் இட்டு சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டினால் நமது சாலட் தயார்.
இதை இரண்டாக பிரித்து இரண்டு வேளையிலும் புதியதாகவும் செய்து கொள்ளலாம்.

இந்த எடை குறைப்பு திட்டத்தில் தவிர்க்க வேண்டிய பொருட்கள்:-
துரித உணவுகள், ஆல்கஹால் ( பீர் உள்பட ), அதிகப்படியான எண்ணெய்
உப்பு மற்றும் சர்க்கரை பகுதியாக்கி எடுத்து கொள்ளலாம்.
அசைவம் உண்பவர்கள் கோழி எடுத்துக் கொள்ளலாம்,
சைவம் உண்பவர்கள் உருளைக்கிழங்கு, காலி பிளவர் எடுத்துக் கொள்ளலாம்.
சுவைக்காக சீரகப் பொடி, மிளகுப்பொடி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
உணவு அட்டவணை:-

குறிப்புகள்:-
முடிந்த அளவில் கீழுள்ள உடற்பயிற்சி அட்டவணையைப் பயன்படுத்தி அதிகப்படியான உடல் எடை இழப்பை பெற முயற்சிக்கவும்.
நாள்கள் | உடற்பயிற்சி | மொத்தம் | எடை | எடை இழப்பு |
---|---|---|---|---|
நாள் 1 | 2 நிமிடம் நடை, 3 நிமிடம் மித வேக நடை ( காலை மட்டும் ) | 30 நிமிடங்கள் | 86.3 | – |
நாள் 2 | 3 நிமிடம் நடை,2நிமிடம் மித வேக நடை ( காலை, மாலை ) | 30 நிமிடங்கள் | 86.1 | 0.2 |
நாள் 3 | 1 நிமிடம் நடை, 4 நிமிடம் மித வேக நடை ( காலை, மாலை ) | 30 நிமிடங்கள் | 85.4 | 0.7 |
நாள் 4 | 2 நிமிடம் நடை, 3 நிமிடம் மித வேக நடை ( காலை மட்டும் ) | 30 நிமிடங்கள் | 84.7 | 0.7 |
நாள் 5 | 4 நிமிடம் நடை, 6 நிமிடம் மித வேக நடை ( காலை, மாலை ) | 30 நிமிடங்கள் | 83.6 | 1.1 |
நாள் 6 | 7 நிமிடம் நடை, 3 நிமிடம் மித வேக நடை ( காலை மட்டும் ) | 30 நிமிடங்கள் | 82.8 | 0.8 |
நாள் 7 | 2நிமிடம் நடை, 2நிமிடம் மித வேக நடை, 1 நிமிடம் ஓட்டம் ( காலை மட்டும் ) | 45 நிமிடங்கள் | 81.5 | 1.3 |
ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோய் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மாருக்கு இந்த திட்டம் அறிவுறுத்தப்படவில்லை.
நமது உடல் எடைக்கும் உழைப்புக்கும் தேவையான அளவிலான எரிசக்தி/கலோரி அளவில் பாதியளவே நாம் உணவாக எடுத்துக்கொள்வதால் உடல் எடை இழப்பு துரிதம் ஆகிறது.
நமது தாய் மொழியில் செயல் படுத்தி, அனுபவப் பட்டுவுடன் செயல் முறைக்கு சொல்லக்கூடிய உடல் மேலாண்மை ( Body Management ) திட்டம் இல்லாததால் இது முதல் முறையாக சுய அனுபவத்துடன் உங்களிடம் பகிரப்படுகிறது.
உங்களின் சந்தேகங்கள் மற்றும் விளக்க கேள்விகளை கீழே கேளுங்கள், முடிந்த வரையில் தீர்க்க முயற்சிக்கிறோம்.
கூடிய விரைவில் சுயமாக பரிசோதித்து உணர்ந்த அனைத்து வீடியோ பயிற்சிகளும், உணவு மற்றும் குறிப்புகளும், நமது Tamizzle யூ டியூப் சேனலில் பகிரப்படும்.
இந்த திட்டம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் உறவுகள், நட்புகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
எங்களின் தமிழக பக்கம் பேஸ் புக் பேஜில் இணைந்து கொள்ளுங்கள்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே –
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே